puvi

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு / Manavaalvu Puvi Vaalvinil Vaalvu / Manavalvu Puvi Valvinil Valvu

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

1
துணை பிரியாது தோகையிம்மாது
துப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது நல்ல

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

2
ஜீவ தயாகரா சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா
தேவகுமாரா திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா நல்ல

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

3
குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம் அன்பு உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் நல்ல

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

4
மன்றல் செய் தேவி மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறையுமே தாவி
மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி நல்ல

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

Don`t copy text!