pravin

மழையிலும் வெயிலிலும் கண்டேன் | Mazhaiyilum Veyililum Kanden / Mazhaiyilum Veyililum Kandaen

மழையிலும் வெயிலிலும் கண்டேன்
இரவிலும் பகலிலும் கண்டேன்
நாதா உம்மை நான் கண்டேன்

கருணையாய் கடலிலும் கண்டேன்
வசனமாய் அலையிலும் கண்டேன்
நாதா உம்மை நான் கண்டேன்

காரிருள் வலியிலும் இடறும் என் வழியிலும்
நாதா உம்மை நான் கண்டேன்
இயேசுநாதா உம்மை கண்டேன்

வாழ்த்திப்பாடு வாழ்த்திப்பாடு
இயேசுவின் நாமத்தை வாழ்த்திப்பாடு

1
விரியும் ஓர் இதழிலும் கண்டேன்
எரியும் ஓர் திரியிலும் கண்டேன்
என்னிலே சுவாசமாய் நீர் நிறைந்து
என்னாத்மாவின் தீபமாய் நீர் ஒளிர்ந்து
இந்நாதத்திலும் அதின் ரூபத்திலும்
வானவில்லிலும் நிலவின் அழகினிலும்
இந்த ஸ்வரம் ஏழிலிலும்
இயேசுநாதா உம்மை கண்டேன்

மழையிலும் வெயிலிலும் கண்டேன்
இரவிலும் பகலிலும் கண்டேன்
நாதா உம்மை நான் கண்டேன்

2
சுமந்திடும் தோளிலும் கண்டேன்
வடுக்களின் அறிவிலும் கண்டேன்
முள்முடி குருதியில் நான் அழுதேன்
என் பாவத்தின் பாரம் நீர் சுமந்து நின்றீர்
இவ்வானத்திலும் கீழ்வானத்திலும்
இளங்காற்றிலும் பூங்குயில் கானத்திலும்
என் விழி நீரிலும் இயேசுநாதா உம்மை கண்டேன்

மழையிலும் வெயிலிலும் கண்டேன்
இரவிலும் பகலிலும் கண்டேன்
நாதா உம்மை நான் கண்டேன்.

வாழ்த்திப்பாடு வாழ்த்திப்பாடு
இயேசுவின் நாமத்தை வாழ்த்திப்பாடு

மழையிலும் வெயிலிலும் கண்டேன் | Mazhaiyilum Veyililum Kanden / Mazhaiyilum Veyililum Kandaen | Krishnapriya Unnikrishnan | M. Jayachandran | A. Pravin Asir

Don`t copy text!