por

நல்ல ஜெயம் போர் செய்தின்றே / Nalla Jeyam Por Seidhindre / Nalla Jeyam Por Seithindre

1
நல்ல ஜெயம் போர் செய்தின்றே
கெலிப்பாய் ராஜா வாராரே
அவரைச் சேர்ந்தோர் யாவரும்
இந்த ஜெயத்தைப் பாடவும்

நல்ல ஜெயம் நல்ல ஜெயம்
முடிவில்லா பூரிப்புமாய்
அல்லேலூயா

2
மீட்பர் அடைந்த வெற்றிக்கு
எச்சிஷ்டியும் களிக்குது
சீர்கெட்ட பூமிக்குள்ளதாம்
சாபம் அத்தால் நிவிர்த்தியாம்

3
கர்த்தர் மரித்த நாளிலே
இருண்ட சூரியன் இன்றே
அவர் உயிர்த்த வெற்றிக்கு
பிரகாசமாய் விளங்குது

4
மா சாந்த ஆட்டிக்குட்டியாய்
இருந்தோர் வல்ல சிங்கமாய்
வாரார் பகைஞரினது
பத்திரக் காவல் விருதா

5
பாவ விஷத்தின் தோஷமும்
அத்தால் இருந்த தீமையும்
ரட்சகராலே நீங்கிற்று
மகிமை தேடப்பட்டது

6
உத்தவாதமாயிற்று
சபிக்கப்பட்ட ஆவிக்கு
நம்மில் பலமில்லாதேபோம்
சாவுக்கினிப் பயந்திரோம்

7
மேட்டிமையான சாத்தானே
தள்ளுண்டு போய் விழுந்ததால்
அவன் அரண்கள் யாவுக்கும்
நிர்மூலமாகுதல் வரும்

8
சீஷரின் ஆத்துமங்களை
நீர்தேற்றி சமாதானத்தை
தந்ததுபோல இயேசுவே
நீர் எங்களுக்கும் தாரீரே

9
நாங்கள் உடந்தையாய் உம்மால்
ஜெயித்து மோட்ச வாசலால்
உட்பிரவேசித் தென்றைக்கும்
உம்முட அன்பைப் பாடவும்

Don`t copy text!