pogireer

எங்கே சுமந்து போகிறீர் / Engae Sumadhu Pogireer / Engey Sumanthu Pogireer / Enge Sumanthu Pogireer

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

1
எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உம
தங்க முழுவதும் நோக ஐயா என் யேசுநாதா

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

2
தோளில் பாரம் அழுத்த தூக்கப் பெலமில்லாமல்
தாளும் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

3
வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

4
தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

5
வல்லபேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

6.
வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ
சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

7
மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

Don`t copy text!