பிதாவே மெய் விவாகத்தை / Pidhaave Mei Vivaagaththai / Pithaave Mei Vivaagaththai / Pidhave Mei Vivagaththai / Pithave Mei Vivagaththai / Pidhaave Mei Vivaagathai
பிதாவே மெய் விவாகத்தை / Pidhaave Mei Vivaagaththai / Pithaave Mei Vivaagaththai / Pidhave Mei Vivagaththai / Pithave Mei Vivagaththai / Pidhaave Mei Vivaagathai
பிதாவே மெய் விவாகத்தை / Pidhaave Mei Vivaagaththai / Pithaave Mei Vivaagaththai / Pidhave Mei Vivagaththai / Pithave Mei Vivagaththai / Pidhaave Mei Vivaagathai / Pithaave Mei Vivaagathai / Pidhave Mei Vivagathai / Pithave Mei Vivagathai
1
பிதாவே மெய் விவாகத்தை
கற்பித்துக் காத்து வந்தீர்
நீர் அதினாலே மாந்தரை
இணைத்து வாழ்வைத் தந்தீர்
அதற்கெப்போதும் கனமும்
மிகுந்த ஆசீர்வாதமும்
நீர் தாமே வரப்பண்ணும்
2
நன்னாளிலும் துன்னாளிலும்
மனம் பொருந்தச் செய்யும்
இவர்கள் இருபேரையும்
அன்பில் நிலைக்கப்பண்ணும்
உம்மை முன்னிட்டு ஏதெதை
செய்வார்களோ நீரே அதை
நன்றாக வாய்க்கப்பண்ணும்
3
ஆ ஜீவ ஊற்றாம் யேசுவே
நீர் ஜீவன் ஈகிறீரே
ஆத்துமத்தையும் நித்தமே
நீர் தேற்றி நிற்கிறீரே
ஆ ஞான மணவாளனே
என்றைக்கும் அடியாருக்கே
குறைச்சல் ஒன்றும் இல்லை