pettriduvom

பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம் / Ponnagar Inbaththai Pettriduvom / Ponnagar Inbathai Pettriduvom

1        
பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்
துன்பமும் துக்கமும் மாறியே போம்
நன்மைச் சொரூபியை தரிசிப்போம்
நீடுழி காலம் பேரின்பமுண்டாம்

பேரின்பமாம் பூரிப்புண்டாம்
பேரின்பமாம் பூரிப்புண்டாம்
மேலுலகில் மேல் அவர் சந்நிதியில்
மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்

2        
மாட்சிமையான காருணியத்தால்
மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்
சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்

பேரின்பமாம் பூரிப்புண்டாம்
பேரின்பமாம் பூரிப்புண்டாம்
மேலுலகில் மேல் அவர் சந்நிதியில்
மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்

3        
அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்
இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்
என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்

பேரின்பமாம் பூரிப்புண்டாம்
பேரின்பமாம் பூரிப்புண்டாம்
மேலுலகில் மேல் அவர் சந்நிதியில்
மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்

Don`t copy text!