இம்மட்டும் ஜீவன் தந்த / Immattum Jeevan Thandha / Immattum Jeevan Thantha
இம்மட்டும் ஜீவன் தந்த / Immattum Jeevan Thandha / Immattum Jeevan Thantha
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்தரிப்போமாக
நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்தரிப்போமாக
1
காலம்சொல் போல் கழியும் தண்ணீரைப்போல் வடியும்
கனாவைப் போலேயும் ஒழியும்
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும் நீர்க குமிழிக்கும் புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன்
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்தரிப்போமாக
2
பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தோம்
வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
கலிஎன்ற தெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்தரிப்போமாக
3
சனசேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்தரிப்போமாக
இம்மட்டும் ஜீவன் தந்த / Immattum Jeevan Thandha / Immattum Jeevan Thantha | Hema John
இம்மட்டும் ஜீவன் தந்த / Immattum Jeevan Thandha / Immattum Jeevan Thantha | Beryl Natasha
இம்மட்டும் ஜீவன் தந்த / Immattum Jeevan Thandha / Immattum Jeevan Thantha | Padmini Pandian
இம்மட்டும் ஜீவன் தந்த / Immattum Jeevan Thandha / Immattum Jeevan Thantha | Padmini Pandian