nirmal

மனிதரின் | Manitharin / Manidharin

1
மனிதரின் நடுவே வசிப்பவரே
எம்மை உம் ஜனமாய் மாற்றினவரே
எங்களின் தேவனாய் இருப்பவரே
கண்ணீர் யாவையும் துடைப்பவரே

மரணமும் துக்கமும் இனி இல்லையே
வருத்தமும் கலக்கமும் இனி இல்லையே
முந்தினவை யாவுமே ஒழிந்தனவே
சகலமும் உம்மால் புதிதாயினவே

அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே
ஆதியும் அந்தமுமே
துவக்கமும் முடிவும் நீரே

அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே
ஆதியும் அந்தமுமே
துவக்கமும் முடிவும் நீரே

2
ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமே
உதித்திடும் நீதியின் சூரியனே
வார்த்தையால் உருவாக்கும் வல்லவரே
நீதியாய் நடத்திடும் ஆளுனரே

தெய்வத்துவத்தின் பரிபூரணமே
இஸ்ரவேலின் ஜெயபலமே
உறங்காமல் தூங்காமல் காப்பவரே
கிருபையாய் என்னை மீட்ட இரட்சகரே

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
உயிரோடு எழுந்தவரே
என்றென்றும் ஆள்பவரே

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
உயிரோடு எழுந்தவரே
என்றென்றும் ஆள்பவரே

மனிதரின் | Manitharin / Manidharin | Nirmal Kumar D S, Joel ThomasRaj | Stephen J Renswick | Nirmal Kumar D S

Don`t copy text!