அன்பு நிறைந்த தெய்வம் நீரே | Anbu Niraintha Deivam Neere / Anbu Niraindha Deivam Neere / Anbu Niraintha Deivam Neerae / Anbu Niraindha Deivam Neerae
அன்பு நிறைந்த தெய்வம் நீரே | Anbu Niraintha Deivam Neere / Anbu Niraindha Deivam Neere / Anbu Niraintha Deivam Neerae / Anbu Niraindha Deivam Neerae
அன்பு நிறைந்த தெய்வம் நீரே
இரக்கத்தில் ஐஸ்வரியம் நீரே
இரத்தம் சிந்தி என்னை மீட்டரே
அன்பு நிறைந்த தெய்வம் நீரே
இரக்கத்தில் ஐஸ்வரியம் நீரே
இரத்தம் சிந்தி என்னை மீட்டரே
தகுதியில்லா அடிமை என்னை
உயந்தவர் உன்னதர் நீரே
ஆனாலும் என்னை நேசித்தீர்
என்னிலே ஒன்றும் இல்லை
என்னிலே நன்மை இல்லை
ஆனாலும் என்னை உயர்த்தினீர்
வாழ்நாளெல்லாம் உம் புகழை
என்றென்றும் பாடிடுவேன்
உந்தன் நாமம் எந்தன் மேன்மை
என்றென்றும் உயர்த்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
1
உன்னதமானவரின் மறைவினால் வாழ்கின்றேன்
சமாதான தாபரம் நீரே
உன்னதமானவரின் மறைவினால் வாழ்கின்றேன்
சமாதான தாபரம் நீரே
உன்னதமானவரின் மறைவினால் வாழ்கின்றேன்
சமாதான தாபரம் நீரே
உம் நாமம் அறிந்ததினாலே உயரத்தில் வைத்தீரையா
என்றென்றும் நீரே அடைக்கலம்
அரணானக் கோட்டை நீரே
என்றென்றும் உம்மை உயர்த்துவேன்
வாழ்நாளெல்லாம் உம் புகழை
என்றென்றும் பாடிடுவேன்
உந்தன் நாமம் எந்தன் மேன்மை
என்றென்றும் உயர்த்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
2
இடுக்கமென்னும் சமுத்திரத்தில் எனக்காக வழித்திறந்தீர்
மகாப் பெரிய தேவன் நீரே
இடுக்கமென்னும் சமுத்திரத்தில் எனக்காக வழித்திறந்தீர்
மகாப் பெரிய தேவன் நீரே
சமுத்திர அலைகளையெல்லாம் வல்லமையால் அடீப்பீரையா
ஆழங்கள் வற்றி போகுமே
சர்ப்பத்தின் தலைகளையெல்லாம் முற்றிலும் உடைப்பீரையா
தடையின்றி கடந்து சென்றிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம் புகழை
என்றென்றும் பாடிடுவேன்
உந்தன் நாமம் எந்தன் மேன்மை
என்றென்றும் உயர்த்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
அன்பு நிறைந்த தெய்வம் நீரே | Anbu Niraintha Deivam Neere / Anbu Niraindha Deivam Neere / Anbu Niraintha Deivam Neerae / Anbu Niraindha Deivam Neerae | Lucas Sekar
