நீர் தந்த நன்மை யாவையும் / Neer Thandha Nanmai Yaavaiyum / Neer Thantha Nanmai Yaavaiyum / Neer Thandha Nanmai Yavaiyum / Neer Thantha Nanmai Yavaiyum
நீர் தந்த நன்மை யாவையும் / Neer Thandha Nanmai Yaavaiyum / Neer Thantha Nanmai Yaavaiyum / Neer Thandha Nanmai Yavaiyum / Neer Thantha Nanmai Yavaiyum
1
நீர் தந்த நன்மை யாவையும்
நினைத்து கர்த்தரே
மகிழ்ச்சியோடு என்றைக்கும்
நான் துதி செய்யவே
2
குழந்தைப் பருவமுதல்
குறைவில்லாமலே
எனக்களித்த நன்மைகள்
ஏராளமானதே
3
என்னோடு வாலிபத்திலும்
இருந்தீர் தேவரீர்
இக்கட்டுண்டான காலத்தும்
விழாமல் தங்கினீர்
4
அநேகமான தீமைகள்
அண்டாமல் தடுத்தீர்
கைம்மாறில்லாத நன்மைகள்
கர்த்தாவே பொழிந்தீர்
5
இம்மையில் என்றும் தாழ்மையாய்
தெய்வன்பை நினைப்பேன்
மறுமையில் வணக்கமாய்
உம்மையே போற்றுவேன்
6
புகழ்ச்சி துதி தோத்திரம்
ஒன்றான உமக்கே
இகத்திலும் பரத்திலும்
எழும்பத் தகுமே
நீர் தந்த நன்மை யாவையும் / Neer Thandha Nanmai Yaavaiyum / Neer Thantha Nanmai Yaavaiyum / Neer Thandha Nanmai Yavaiyum / Neer Thantha Nanmai Yavaiyum | J Devadasan
நீர் தந்த நன்மை யாவையும் / Neer Thandha Nanmai Yaavaiyum / Neer Thantha Nanmai Yaavaiyum / Neer Thandha Nanmai Yavaiyum / Neer Thantha Nanmai Yavaiyum