mun

தெய்வாசன முன் நிற்பரே / Deivaasana Mun Nirpare / Theivaasana Mun Nirpare / Deivasana Mun Nirpare / Theivasana Mun Nirpare

1         
தெய்வாசன முன் நிற்பரே
சேவகத் தூதர் சேனையே
பண் மீட்டி விண்ணில் பாடுவர்
பொன்முடி மாண்பாய் சூடுவர்

2        
சன்னிதி சேவை ஆற்றுவர்
இன்னிசை பாடிப் போற்றுவர்
நாதரின் ஆணை ஏற்றுமே
மேதினியோரைக் காப்பரே

3        
நாதா உம் தூதர் நாளெல்லாம்
நடத்திட நற்பாதையாம்
மாலை இராவின் தூக்கத்தில்
சீலமாய்க் காக்க பாங்கினில்

4        
எத்தீங்கு பயம் சேதமே
கர்த்தா தொடாது எங்களை
வாணாள் முடிந்தும் பாதமே
மாண்பாகச் சேர்வோம் தூதரை

Don`t copy text!