நற்செய்தி மேசியா / Narcheidhi Mesiyaa / Narcheidhi Mesiya / Narcheithi Mesiyaa / Narcheithi Mesiya
நற்செய்தி மேசியா / Narcheidhi Mesiyaa / Narcheidhi Mesiya / Narcheithi Mesiyaa / Narcheithi Mesiya
1
நற்செய்தி மேசியா இதோ
ஆவலாய் நோக்குவோம்
பற்றோடு ஏற்று ஆன்மாவில்
ஆனந்தம் பாடுவோம்
2
வல்லோனால் சிறையானோரை
வல் சிறை நீக்குவார்
நில்லாதே எவ்விரோதமும்
பொல்லாங்கை மேற்கொள்வார்
3
நருங்குண்டோரை ஆற்றியே
நலிவை நீக்குவார்
பரத்தின் பாக்கியசெல்வத்தால்
இரவோர் வாழ்விப்பார்
4
ஓசன்னா ஆர்க்கும் ஓசன்னா
சாந்த இவ்வேந்தர்க்கும்
இயேசுவின் இன்ப நாமமே
பாடுவார் விண்ணோரும்