இரக்கமுள்ள மீட்பரே / Irakkamulla Meetpare
இரக்கமுள்ள மீட்பரே / Irakkamulla Meetpare
1
இரக்கமுள்ள மீட்பரே
நீர் பிறந்த மா நாளிலே
ஏகமாய்க் கூடியே நாங்கள்
ஏற்றும் துதியை ஏற்பீரே
2
பெத்தலை நகர் தனிலே
சுத்த மா கன்னிமரியின்
புத்திரனாய் வந்துதித்த
அத்தனே மெத்த ஸ்தோத்திரம்
3
ஆதித் திரு வார்த்தையான
கோதில்லா இயேசு கர்த்தனே
மேதினியோரை ஈடேற்ற
பூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்
4
பாவம் சாபம் யாவும் போக்க
பாவிகளைப் பரம் சேர்க்க
ஆவலுடன் மண்ணில் வந்த
அற்புத பாலா ஸ்தோத்திரம்
5
உன்னதருக்கே மகிமை
உலகினில் சமாதானம்
இத்தரை மாந்தர்மேல் அன்பு
உண்டானதும்மால் ஸ்தோத்திரம்
6
பொன் செல்வம் ஆஸ்தி மேன்மையும்
பூலோக பொக்கிஷங்களும்
எங்களுக்கு எல்லாம் நீரே
தங்கும் நெஞ்சத்தில் ஸ்தோத்திரம்