maravaamal

மறவாமல் நொடியும் விலகிடாமல் | Maravaamal Nodiyil Vilagidaamal

மறவாமல் நொடியும் விலகிடாமல்
என் கரங்கள் பற்றிகொண்டீரே
மறவாமல் நொடியும் விலகிடாமல்
மார்போடு அனைத்துக் கொண்டீரே

நிகரில்லா சிலுவையின் அன்பதை மறந்து
நிலையில்லா உலகினை என் கண் தேட
உலகின் மாயைகள் என்னை வந்து நெருக்க
அழையா குரல் ஒன்று என்னை வந்து தேற்ற

எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்
உலகின் ஆச்சர்யங்கள் அற்பமானதே
எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்
உலகின் ஆச்சர்யங்கள் அற்பமானதே

அணு முதல் அனைத்தும் உம் வார்த்தையாலே இயங்க
அற்பன் எனக்காய் ஏங்கி நின்றீரே
அழுக்கும் கந்தையுமாய் அலைந்து திரிந்த என்னை
அளவற்ற அன்பாலே அள்ளி அணைத்தீரே

உடைந்த உள்ளம் உம்மிடத்தில் தந்தேன்
உருமாற்றி என்னை உயர்த்தி வைத்தீர்
ஏதுமில்லை என்று கை விரித்து நின்றேன்
எல்லாம் நீரே என உணரச்செய்தீர்

எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்
உலகின் ஆச்சர்யங்கள் அற்பமானதே
எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்
உலகின் ஆச்சர்யங்கள் அற்பமானதே

மறவாமல் நொடியும் விலகிடாமல்
மார்போடு அணைத்துக்கொண்டீரே

மறவாமல் நொடியும் விலகிடாமல் | Maravaamal Nodiyil Vilagidaamal | Aarthi Edwin | Giftson Durai | Aarthi Edwin

Don`t copy text!