marappadhilai

மறப்பதில்ல / Marappadhila / Marappathila / Marapadhila / Marapathila / மறப்பதில்லை / Marappadhilai / Marappathilai / Marapadhilai / Marapathilai

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உன்னோடு மகனே நான் இருப்பேன்
மறப்பதில்ல மறந்து போவதில்ல உன்னை
மறப்பதில்ல மறந்து போவதில்ல

1
கடந்து வந்த உன் பாதையெல்லாம்
நான் தானே உன்னை சுமந்து வந்தேன்
என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்க
எப்படி நான் உன்னை மறந்திருப்பேன்

மறப்பதில்ல மறந்து போவதில்ல உன்னை
மறப்பதில்ல மறந்து போவதில்ல

2
இலையுதிரா மரமாக
நான் தானே உன்னை வளர்த்து வந்தேன்
வேலி போட்டு உன்ன காத்திருக்க
வெட்டிப் போட அனுமதி தர மாட்டேன்

கலங்கிட வேண்டாம் உன்னை கைவிடமாட்டேன்
பயப்பட வேண்டாம் உன் பக்கம் நிற்கிறேன்
கலங்கிட வேண்டாம் உன்னை கைவிடமாட்டேன்
பயப்பட வேண்டாம் உன் பக்கம் நிற்கிறேன்

மறப்பதில்ல மறந்து போவதில்ல உன்னை
மறப்பதில்ல மறந்து போவதில்ல

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உன்னோடு மகனே நான் இருப்பேன்

மறப்பதில்ல / Marappadhila / Marappathila / Marapadhila / Marapathila / மறப்பதில்லை / Marappadhilai / Marappathilai / Marapadhilai / Marapathilai | Thomas

Don`t copy text!