manos

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே | Yesuvin Maarbil Naan Saaindhumae

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்

பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே

வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா
வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன்

1
சோதனை யாலென்னுள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்
சோதனை யாலென்னுள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்

என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்

வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா
வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன்

2
சிநேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசராய் இயேசென்னோடிருப்பதால்
சிநேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசராய் இயேசென்னோடிருப்பதால்

மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்

வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா
வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன்

3
என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே
என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே

ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் வாழுவேன்
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் வாழுவேன்

வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா
வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன்

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே | Yesuvin Maarbil Naan Saaindhumae | Johnsam Joyson | P. Joyson

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே | Yesuvin Maarbil Naan Saaindhumae | Davidsam Joyson, Manu Chandran, Leo Henchman, Blesswin, Elbin, Benil | P. Joyson

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே | Yesuvin Maarbil Naan Saaindhumae | MOOLACHEL CHURCH IPC, Moolachel, Kanniyakumari, Tamil Nadu, India | P. Joyson

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே | Yesuvin Maarbil Naan Saaindhumae | D. J. Ezra Gnanaraj, Beulah Christian Church (BCC) Team, Chennai, Tamil Nadu, India | P. Joyson

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே | P. Joyson

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே | Jefferson Manos / Church of Sharon in India | P. Joyson

Don`t copy text!