இயேசு கிறிஸ்துவே உலகத்திலே / Yesu Kristhuve Ulagaththile / Yesu Kristhuve Ulagathile
இயேசு கிறிஸ்துவே உலகத்திலே / Yesu Kristhuve Ulagaththile / Yesu Kristhuve Ulagathile
1
இயேசு கிறிஸ்துவே
உலகத்திலே
கெட்டுப்போனவருக்கான
ஒளியும் உயிருமான
ரட்சகர் நீரே
இயேசு கிறிஸ்துவே
2
என்னை மீட்க நீர்
ஜீவனை விட்டீர்
குற்றத்தை எல்லாம் குலைக்க
என்னைத் தீமைக்கு மறைக்க
எனக்காக நீர்
ஜீவனை விட்டீர்
3
எங்கள் மீட்புக்கு
லோகத் தோற்றத்து
நாளின் முன்னே வார்த்தை தந்தீர்
காலமாகையில் பிறந்தீர்
பாவிகளுக்கு
மீட்புண்டாயிற்று
4
வெற்றி வேந்தரே
பாவம் சாபம் பேய்
நரகத்தையும் ஜெயித்தீர்
நாங்கள் வாழ நீர் மரித்தீர்
உம்மால் துஷ்டப் பேய்
வெல்லப்பட்டதே
5
மா இராஜாவே
பணிவுடனே
தேவரீருக்குக் கீழ்ப்பட்டு
உமது மொழியைக் கற்று
அதை நெஞ்சிலே
வைப்பேன் இயேசுவே
