kristhu

இந்நாளே கிறிஸ்து வெற்றியை / Innale Kristhu Vetriyai

1
இந்நாளே கிறிஸ்து வெற்றியை
அடைந்து தம் பகைஞரைச்
சிறைப்பிடித்துக் கொண்டுபோம்
ஜெய நாளென்று பாடுவோம்
அல்லேலூயா

2
பேய் பாவம் சாவு நரகம்
எக்கேடும் இன்றையத்தினம்
எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்
கீழாய் விழுந்து கெட்டது
அல்லேலூயா

3
இரண்டு சீஷரோடன்றே
வழியில் கர்த்தர் பேசவே
பேரின்பம் மூண்டு பிறகு
ஆரென்றறியலாயிற்று
அல்லேலூயா

4
அந்நாளில் சீஷர் கர்த்தரின்
அற்புதக் காட்சி கண்டபின்
துக்கித்தவர்கள் நெஞ்சுக்கு
சந்தோஷ பூரிப்பாயிற்று
அல்லேலூயா

5
புளிப்பில்லாத அப்பமாம்
சன்மார்க்கப் போதகத்தை நாம்
வழங்கிக் கொண்டிருக்கிறோம்
புளித்த மாவைத் தள்ளுவோம்
அல்லேலூயா

6
கர்த்தாவே எங்கள் நீதிக்காய்
நீர் எழுந்தீர் கெம்பீரமாய்
வெற்றி சிறந்த உமக்கே
மா ஸ்தோத்திரம் உண்டாகவே
அல்லேலூயா

Don`t copy text!