keys

எழுந்தார் இறைவன் / Elundaar Iraivan / Elunthar Iraivan / Ezhundhar Iraivan

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1
சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க இப்
பூவின்மீது சபை செழிக்க எழுந்தார்

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

2
செத்தவர் மீண்டுமே பிழைக்க உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் தேவ
பக்தர் யாவரும் களிக்க எழுந்தார்

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

3
விழுந்தவரைக் கரையேற்றப் பாவத்
தெழுந்து மனுக்குலத்தை மாற்ற விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

4
கருதிய காரியம் வாய்க்கத் தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க நம்
இரு திறத்தாரையும் சேர்க்க

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

எழுந்தார் இறைவன் / Elundaar Iraivan / Elunthar Iraivan / Ezhundhar Iraivan | Jebin Bose S | Mephy Keys

Don`t copy text!