karunakaran

என் பெலவீனம் நீர் அறிகின்றீர் / En Belaveenam Neer Arigindreer

என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர்
என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர்

நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர்
நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர்

என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர்

1
நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்
என்னை வெறுத்து தள்ளினபோதும்
நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்
என்னை வெறுத்து தள்ளினபோதும்

நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை உம்
அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர்
நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை உம்
அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர்

என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர்

2
சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்
உம் வேத வசனத்தால் தேற்றினீரே
சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்
உம் வேத வசனத்தால் தேற்றினீரே

மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்
மெழுகை போல உருக செய்தீர்
மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்
மெழுகை போல உருக செய்தீர்

என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர்

3
உடைந்த உள்ளத்தை உருவாக்குகின்ற
உயிருள்ள தேவன் நீர் அல்லவோ
உடைந்த உள்ளத்தை உருவாக்குகின்ற
உயிருள்ள தேவன் நீர் அல்லவோ

நீர் எந்தன் தகப்பனாய் என்னோடிருக்க
நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன்
நீர் எந்தன் தகப்பனாய் என்னோடிருக்க
நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன்

என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர்
என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர்

நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர்
நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர்

என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர்

என் பெலவீனம் நீர் அறிகின்றீர் / En Belaveenam Neer Arigindreer | Jollee Abraham | Karunakaran Selvamani

Don`t copy text!