நான் தேவரீரை கர்த்தரே / Naan Devareerai Karththare / Naan Devareerai Karthare
நான் தேவரீரை கர்த்தரே / Naan Devareerai Karththare / Naan Devareerai Karthare
1
நான் தேவரீரை கர்த்தரே
துதிப்பேன் அடியேன்
எல்லாரின் முன்னும் உம்மையே
அறிக்கை பண்ணுவேன்
2
ஆ எந்தப் பாக்கியங்களும்
உம்மால்தான் வருமே
உண்டான எந்த நன்மைக்கும்
ஊற்றானவர் நீரே
3
உண்டான நம்மை யாவையும்
நீர் தாரீர் நித்திய கர்த்தரே
உம்மாலொழிய எதுவும்
உண்டாகக் கூடாதே
4
நீர் வானத்தை உண்டாக்கின
கர்த்தா புவிக்கு நீர்
கனிகளைக் கொடுக்கிற
பலத்தையும் தந்தீர்
5
குளிர்ச்சிக்கு மறைவையும்
தாரீர் எங்களுக்குப்
புசிப்பதற்கு கப்பமும்
உம்மால் உண்டாகுது
6
ஆரால் பலமும் புஷ்டியும்
யாராலேதான் இப்போ
நற்காலஞ் சமாதானமும்
வரும் உம்மால் அல்லோ
7
ஆ இதெல்லாம் தயாபரா
நீர் செய்யும் செய்கையே
நீர் எங்களைத் தற்காக்கிற
அன்புள்ள கர்த்தரே
8
உம்மாலே வருஷாந்திரம்
பிழைத்து வாழ்கிறோம்
உம்மாலே நாங்கள் விக்கினம்
வந்தாலும் தப்பினோம்
9
ஆ களிகூர்ந்து பூரித்து
மகிழ் என் மனதே
பராபரன் தான் உனது
அநந்த பங்காமே
10
அவர் உன் பங்கு உன் பலன்
உன் கேடகம் நன்றாய்த்
திடப்படுத்தும் உன் திடன்
நீ கைவிடப்படாய்
11
உன் நெஞ்சு ராவும் பகலும்
துக்கிப்பதென்ன நீ
உன் கவலை அனைத்தையும்
கர்த்தாவுக் கொப்புவி
12
உன் சிறு வயதுமுதல்
பராமரித்தாரே
கர்த்தாவால் வெகு மோசங்கள்
விலக்கப்பட்டதே
13
கர்த்தாவின் ஆளுகை எல்லாம்
தப்பற்றதல்லவோ
ஆம் அவர் கை செய்வதெல்லாம்
நன்றாய் முடியாதோ
14
ஆகையினால் கர்த்தாவுக்கு
நீ பிள்ளைப் பக்கியாய்
எப்போதுங் கீழ்ப்படிந்திரு
அப்போதே நீ வாழ்வாய்