karththar

கர்த்தர் என் பக்கமாகில் / Karththar En Pakkamaagil / Karthar En Pakkamaagil / Karththar En Pakkamagil / Karthar En Pakkamagil


கர்த்தர் என் பக்கமாகில்
எனக்குப் பயம் ஏன்
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்
அப்போதென்மேலே வந்த
பொல்லாவினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்பு போலே ஆம்


என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான கர்த்தரே
அதாலே பக்தர் யாரும்
திடன் கொள்வார்களே
நான் ஏழை பலவீனன்
வியாதிப்பட்டோனே
அவரில் சொஸ்தம் ஜீவன்
சமஸ்தமும் உண்டே


என் நீதி இயேசுதானே
அவர் இல்லாவிட்டால்
பிதாவுக்குமுன் நானே
மா பாவியானதால்
விழிக்கவும் கூடாதே
என் இயேசுவன்றியே
ரட்சிப்புக் கிடையாதே
என் மீட்பர் அவரே


என் சாவு இயேசுவாலே
விழுங்கப்பட்டது
இவர் இரக்கத்தாலே
என் பாவக் கேட்டுக்கு
நான் நன்றாய் நீங்கலானேன்
நான் நியாயத் தீர்ப்புக்கும்
பயப்படாதோனானேன்
வாழ்வெனக்கு வரும்


தெய்வாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுதே
அப்பாவே என்று சொல்ல
அவர் என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம் செய்ய
என் ஆவி தேறுதே


என் உள்ளமே களிக்கும்
துக்கிக்கவேண்டுமோ
கர்த்தர் என் மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன் உண்டாக்குமே

Don`t copy text!