karththaa

கர்த்தா நீர் வசிக்கும் / Karththaa Neer Vasikkum / Karthaa Neer Vasikkum / Karththa Neer Vasikkum / Kartha Neer Vasikkum

1   
கர்த்தா நீர் வசிக்கும்
ஸ்தலத்தை நேசிப்போம்
பாரின்பம் யாவிலும்
உம் வீட்டை வாஞ்சிப்போம்

2   
உம் ஜெப வீட்டினில்
அடியார் கூட நீர்
பிரசன்னமாகியே
உம் மந்தை வாழ்த்துவீர்

3   
மெய் ஞானஸ்நானத்தின்
ஸ்தானத்தை நேசிப்போம்
விண் புறாவாம் ஆவியால்
பேரருள் பெறுவோம்

4   
மா தூய பந்தியாம்
உம் பீடம் நேசிப்போம்
விஸ்வாசத்தால் அதில்
சமுகம் பணிவோம்

5   
மெய் ஜீவனுள்ளதாம்
உம் வார்த்தை நேசிப்போம்
சந்தோஷம் ஆறுதல்
அதில் கண்டடைவோம்

6   
உன் அன்பின் பெருக்கை
இங்கெண்ணிப் போற்றுவோம்
விண் ஜெய கீதமோ
எப்போது பாடுவோம்

7   
கர்த்தா உம் முகத்தை
கண்ணாரக் காணவே
உம்மை இப்பாரினில்
நேசிக்க ஏவுமே

கர்த்தா நீர் வசிக்கும் / Karththaa Neer Vasikkum / Karthaa Neer Vasikkum / Karththa Neer Vasikkum / Kartha Neer Vasikkum

Don`t copy text!