பயந்து கர்த்தரின் / Bayandhu Karththarin / Bayanthu Kartharin
பயந்து கர்த்தரின் / Bayandhu Karththarin / Bayanthu Kartharin
யந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
1
உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
2
ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
3
கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
பயந்து கர்த்தரின் / Bayandhu Karththarin / Bayanthu Kartharin | Cherubim Choir, Chennai