kalanguvathen

கலங்குவதேன் / Kalanguvadhen / Kalanguvathen

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்
கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்
கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

1
சோர்ந்து போன உன்
உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன்
நெஞ்சம் காண்கிறார்

சோர்ந்து போன உன்
உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன்
நெஞ்சம் காண்கிறார்

அழைத்த தேவன் உன்னை
நடத்தி செல்வார்
அழைத்த தேவன் உன்னை
நடத்தி செல்வார்

கண்ணீரை துடைப்பார்
கவலைகள் மாற்றுவார்
கண்ணீரை துடைப்பார்
கவலைகள் மாற்றுவார்

புது ஜீவன் ஊற்றுவார்
புது சிருஷ்டி ஆக்குவார்

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் நீ
கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

2
துன்ப பட்டாலும்
கைவிடப்படுவதில்லை
தள்ள பட்டாலும்
மடிந்து போவதில்லை

துன்ப பட்டாலும்
கைவிடப்படுவதில்லை
தள்ள பட்டாலும்
மடிந்து போவதில்லை

வாழும் தேவன் உன்னை
காத்து கொள்வார்
வாழும் தேவன் உன்னை
காத்து கொள்வார்

இயேசுவின் மகிமையுமே
உன்னிலே வெளிப்படுமே
இயேசுவின் மகிமையுமே
உன்னிலே வெளிப்படுமே

சீக்கிரம் நீங்குடும் இந்த
லேசான உபத்திரவம்

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் நீ
கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

3
அவருக்கான உன்
இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன்
அலைச்சல்கள் காண்கிறார்

அவருக்கான உன்
இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன்
அலைச்சல்கள் காண்கிறார்

நீதி தேவன் உனக்கு
நியாயம் செய்வார்
நீதி தேவன் உனக்கு
நியாயம் செய்வார்

நிச்சயம் பலன் தருவார்
உறுதியாய் உயர்த்திடுவார்
நிச்சயம் பலன் தருவார்
உறுதியாய் உயர்த்திடுவார்

தோல்வியில் ஜெயம் தருவார்
வியாதியில் சுகம் தருவார்

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் நீ
கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

Don`t copy text!