kakiravar

உன்னை காக்கிறவர் உறங்கார் | Unnai Kakiravar Urangaar / Unnai Kakkiravar Urangaar

உன்னை காக்கிறவர் உறங்கார்
உந்தன் காலைத் தள்ளாட வொட்டார்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்

1
பாவமும் சாபமும் சூழ்ந்த போதும்
பாவத்திற்காய் மனம் திரும்பும் போது
பாவமும் சாபமும் சூழ்ந்த போதும்
பாவத்திற்காய் மனம் திரும்பும் போது

பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே

உன்னை காக்கிறவர் உறங்கார்
உந்தன் காலைத் தள்ளாட வொட்டார்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்

2
மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்
ஆழி போல் சோதனை பெருகினாலும்
மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்
ஆழி போல் சோதனை பெருகினாலும்

கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே

உன்னை காக்கிறவர் உறங்கார்
உந்தன் காலைத் தள்ளாட வொட்டார்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்

3
சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாகவும் இருக்கும்
சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாகவும் இருக்கும்

கர்த்தரை தேடுவோர்க்கு குறைவில்லை என்பதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே

உன்னை காக்கிறவர் உறங்கார்
உந்தன் காலைத் தள்ளாட வொட்டார்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்

4
வழுவாது உன்னைக் காத்திடவும்
மகிமையின் சந்நிதியில் மகிழ்ச்சியாக
வழுவாது உன்னைக் காத்திடவும்
மகிமையின் சந்நிதியில் மகிழ்ச்சியாக

மாசற்று நிறுத்த வல்லவர் இருப்பதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே

உன்னை காக்கிறவர் உறங்கார்
உந்தன் காலைத் தள்ளாட வொட்டார்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்

உன்னை காக்கிறவர் உறங்கார் | Unnai Kakiravar Urangaar / Unnai Kakkiravar Urangaar | Helen Satya

Don`t copy text!