kaatre

காற்றே / Kaatre / Katre / Kaatrey / Katrey

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு
அவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடு
பேசிடும் அவர் வார்த்தை சுமந்திடு
அவர் செய்யும் அற்புதத்தை செய்திடு

வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமே
அற்புதமே அற்புதமே
உள்ளம் எல்லாம் துதிக்கின்றதே
உணர்வெல்லாம் அசைகின்றதே

1
ஜீவ காற்றே சுவாசக் காற்றே
கீழ்க்காற்றே பெருங்காற்றே
தென்றல் காற்றே வாடைக்காற்றே
அக்கினியான சுழல் காற்றே

தூதரைக் காற்றுகளாக்குகிறீர்
எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்
ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே என்றென்றுமே

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு
அவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடு
பேசிடும் அவர் வார்த்தை சுமந்திடு
அவர் செய்யும் அற்புதத்தை செய்திடு

2
குயவனே உங்க கரத்தினாலே
குறைகள் மாறியதே
தேவனே உங்க அன்பினாலே
அழைப்பும் அழகானதே

ஜீவ காற்றே சுவாசக் காற்றே
கீழ்க்காற்றே பெருங்காற்றே
தென்றல் காற்றே வாடைக்காற்றே
அக்கினியான சுழல் காற்றே

தூதரைக் காற்றுகளாக ஆக்குகிறீர்
எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்
ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே என்றென்றுமே

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு
அவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடு
பேசிடும் அவர் வார்த்தை சுமந்திடு
அவர் செய்யும் அற்புதத்தை செய்திடு

3
இமையின் அசைவில் எனது கனவில்
என்றென்றும் அவர் பாடல்
இதயத் துடிப்பில் உயிரின் உயிரில்
இயேசுவைப் பார்த்திடுவேன்

ஜீவ காற்றே சுவாசக் காற்றே
கீழ்க்காற்றே பெருங்காற்றே
தென்றல் காற்றே வாடைக்காற்றே
அக்கினியான சுழல் காற்றே

தூதரைக் காற்றுகளாக ஆக்குகிறீர்
எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்
ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே என்றென்றுமே

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு
அவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடு
பேசிடும் அவர் வார்த்தை சுமந்திடு
அவர் செய்யும் அற்புதத்தை செய்திடு

வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமே
அற்புதமே அற்புதமே
உள்ளம் எல்லாம் துதிக்கின்றதே
உணர்வெல்லாம் அசைகின்றதே

ஜீவ காற்றே சுவாசக் காற்றே
கீழ்க்காற்றே பெருங்காற்றே
தென்றல் காற்றே வாடைக்காற்றே
அக்கினியான சுழல் காற்றே

தூதரைக் காற்றுகளாக்குகிறீர்
எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்

ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே
ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே

ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே
ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே என்றென்றுமே

காற்றே / Kaatre / Katre / Kaatrey / Katrey | Daniel Jawahar

Don`t copy text!