kaala

காலா காலமாய் | Kaala Kaalamai / Kaalaa Kaalamaai

1
காலா காலமாய் நேசரென் இயேசுவே
ஞாலமகிலமும் உம் புகழ் சாற்றுவேன்
காலா காலமாய் நேசரென் இயேசுவே
ஞாலமகிலமும் உம் புகழ் சாற்றுவேன்

கானக வழியதில் ஜீவ ஒளியாய்
காருண்யனே என்னையும்
கருத்தாய்க் காத்தீரன்றோ
கானக வழியதில் ஜீவ ஒளியாய்
காருண்யனே என்னையும்
கருத்தாய்க் காத்தீரன்றோ

இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்
இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்

நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதைக் காட்டி காத்திடும் என் தீபமும் நீரே
நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதைக் காட்டி காத்திடும் என் தீபமும் நீரே

2
பாதை தவறியே மாய்ந்த எந்தனுக்காய்
பாதை சத்தியம் ஜீவனாய் உதித்தே
பாதை தவறியே மாய்ந்த எந்தனுக்காய்
பாதை சத்தியம் ஜீவனாய் உதித்தே

மன்னித்து மறந்தீர் என் பாவம் அனைத்தும்
மந்தையில் சேர்த்தீரன்றோ
தந்தையே உமக்கென் செய்வேன்
மன்னித்து மறந்தீர் என் பாவம் அனைத்தும்
மந்தையில் சேர்த்தீரன்றோ
தந்தையே உமக்கென் செய்வேன்

இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்
இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்

நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதைக் காட்டி காத்திடும் என் தீபமும் நீரே
நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதைக் காட்டி காத்திடும் என் தீபமும் நீரே

3
பொன்னும் வெள்ளியும் அக்கினி சூளையில்
புடமிட்டு சுத்தம் செய்திடுவது போல்
பொன்னும் வெள்ளியும் அக்கினி சூளையில்
புடமிட்டு சுத்தம் செய்திடுவது போல்

உபத்ரவத்தின் குகையில் சோதித்தென்னை
உத்தமனாய் நிறுத்த
தெரிந்தெடுத்தீரன்றோ
உபத்ரவத்தின் குகையில் சோதித்தென்னை
உத்தமனாய் நிறுத்த
தெரிந்தெடுத்தீரன்றோ

இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்
இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்

நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதைக் காட்டி காத்திடும் என் தீபமும் நீரே
நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதைக் காட்டி காத்திடும் என் தீபமும் நீரே

4
துரைத்தனம் அதிகாரம் வல்லமையும்
திருச்சபைக் கெதிராய் போராடிடுதே
துரைத்தனம் அதிகாரம் வல்லமையும்
திருச்சபைக் கெதிராய் போராடிடுதே

திடனடைந்து தைரியமாய் போராடிட
ஆவியின் பெலன் ஈந்திடும்
உம்மோடு ஜெயம் பெறவே
திடனடைந்து தைரியமாய் போராடிட
ஆவியின் பெலன் ஈந்திடும்
உம்மோடு ஜெயம் பெறவே

இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்
இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்

நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதைக் காட்டி காத்திடும் என் தீபமும் நீரே
நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதைக் காட்டி காத்திடும் என் தீபமும் நீரே

5
உமக்கு பயந்து உம் நாமம் தியானிப்போரை
உமக்காய்ச் சேர்த்திட நேசர் நீர் வருவீர்
உமக்குச் பயந்து உம் நாமம் தியானிப்போரை
உமக்காய் சேர்த்திட நேசர் நீர் வருவீர்

உமது சம்பத்தைக் கடாட்சிக்கும் நாளில்
உம்முடன் இயேசுவே நான்
சீயோனில் சேர்ந்திடுவேன்
உமது சம்பத்தைக் கடாட்சிக்கும் நாளில்
உம்முடன் இயேசுவே நான்
சீயோனில் சேர்ந்திடுவேன்

இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்
இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்

நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதைக் காட்டி காத்திடும் என் தீபமும் நீரே
நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதைக் காட்டி காத்திடும் என் தீபமும் நீரே

காலா காலமாய் | Kaala Kaalamai / Kaalaa Kaalamaai | The Pentecostal Mission Chennai (TPM Chennai)

காலா காலமாய் | Kaala Kaalamai / Kaalaa Kaalamaai | G. P. S. Robinson, Trinita Robinson / Jesus Meets Ministries, Avadi, Chennai, India | The Pentecostal Mission Chennai (TPM Chennai)

Don`t copy text!