josh

உம்மை விட்டு | Ummai Vittu

உம்மை விட்டு எங்கு நான் செல்வேன்
ஜீவ வார்த்தை உம்மிடம் தானே
ஆதி அந்தம் என்றும் நீர் என் சொந்தம்
இந்த பந்தம் வாழ்வின் ஆனந்தமே

உம்மை விட்டு எங்கு நான் செல்வேன்
ஜீவ வார்த்தை உம்மிடம் தானே
ஆதி அந்தம் என்றும் நீர் என் சொந்தம்
இந்த பந்தம் வாழ்வின் ஆனந்தமே

1
விடியற்காலை சிறகடித்து
ஆகாய எல்லை பறந்தேன்
உம பார்வை என்மேல் விழாதிருக்க
கடலின் ஆழம் சென்றேன்

விடியற்காலை சிறகடித்து
ஆகாய எல்லை பறந்தேன்
உம் பார்வை என்மேல் விழாதிருக்க
கடலின் ஆழம் சென்றேன்

மகா ஒளி கீற்று இருள் நீங்கிற்று
மகா ஒளி கீற்று இருள் நீங்கிற்று

இருளும் உம் முன் வெளிச்சம் ஆகுமே
சமூகம் என் முன்னே செல்லும்
கிருபை என்னை பின் தொடருதே

உம்மை விட்டு எங்கு நான் செல்வேன்
ஜீவ வார்த்தை உம்மிடம் தானே
ஆதி அந்தம் என்றும் நீர் என் சொந்தம்
இந்த பந்தம் வாழ்வின் ஆனந்தமே

2
குற்ற பாரம் என் நெஞ்சின் ஓரம்
உம் பக்கம் சேர மறுத்தேன்
உலகம் என்னை கவர்ந்திழுக்க
விலகி சென்றேன் தூரம்

குற்ற பாரம் என் நெஞ்சின் ஓரம்
உம் பக்கம் சேர மறுத்தேன்
உலகம் என்னை கவர்ந்திழுக்க
விலகி சென்றேன் தூரம்

திரும்பி பார்த்தேன் என் பின்னே நின்றீர்
திரும்பி பார்த்தேன் என் பின்னே நின்றீர்

உந்தன் அன்பு வியக்க வைக்குதே
விழுந்தேன் உம் அன்பின் பாதம்
தொடர்வேன் நான் உந்தன் பாதையில்

உம்மை விட்டு எங்கு நான் செல்வேன்
ஜீவ வார்த்தை உம்மிடம் தானே
உம்மை விட்டு எங்கு நான் செல்வேன்
ஜீவ வார்த்தை இயேசுவே நீர்தானே

உம்மை விட்டு | Ummai Vittu | Josh Elgan Alwyn, Alwyn Micaiah T. | Allen Onesimus | Alwyn Micaiah T.

Don`t copy text!