jodhiye

பரத்தின் ஜோதியே / Paraththin Jodhiye / Parathin Jodhiye / Paraththin Jothiye / Parathin Jothiye

1    
பரத்தின் ஜோதியே
என்மேல் இறங்கிடும்
பிரகாசத்துடனே
உள்ளத்தில் விளங்கும்
நீர் ஜீவ ஜோதி தேவரீர்
நற் கதிர் வீசக்கடவீர்

2    
நிறைந்த அருளால்
லௌகீக ஆசையை
அகற்றி ஆவியால்
பேரின்ப வாஞ்சையை
வளர்த்து நித்தம் பலமாய்
வேரூன்றச் செய்யும் தயவாய்

3    
நீர் என்னை ஆளுகில்
நான் வாழ்ந்து பூரிப்பேன்
நீர் என்னை மறக்கில்
நான் தாழ்ந்து மாளுவேன்
என் ஊக்கம் ஜீவனும் நீரே
கடாட்சம் செய்யும் கர்த்தரே

4    
தெய்வன்பும் தயவும்
உம்மாலேயே உண்டாம்
நற்  குணம் யாவுக்கும்
நீர் ஜீவ ஊற்றேயாம்
நான் வாழும்படி என்றைக்கும்
என்னை நிரப்பியருளும்

பரத்தின் ஜோதியே / Paraththin Jodhiye / Parathin Jodhiye / Paraththin Jothiye / Parathin Jothiye

Don`t copy text!