jodhiye

ஜீவாதிபதி ஜோதியே / Jeevaadhibadhi Jodhiye / Jeevaathibathi Jothiye / Jeevadhibadhi Jodhiye / Jeevathibathi Jothiye

1         
ஜீவாதிபதி ஜோதியே
பக்தரின் இன்ப இயேசுவே
லோகின் மா இன்பம் ருசித்தும்
சேர்ந்தோம் உம்பாதமே மீண்டும்

2        
பாதம் சேர்ந்தோரை மீட்பீரே
இவ்வுண்மை என்றும் மாறாதே
தேடுவோர்க்கு நீர் நல்லவர்
பற்றுவோர்க்குச் சம்பூரணர்

3        
விண் அப்பம் உம்மில் ருசிப்போம்
முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்
நீர் ஜீவ ஊற்று உம்மிலே
உள்ளத்தின் தாகம் தீருமே

4        
மாறிடும் வாழ்க்கை யாவிலும்
எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்
உம் அருட் பார்வை இன்பமே
விஸ்வாசிப்போர்க்குப் பாக்கியமே

5        
தங்கும் எம்மோடு இயேசுவே
எக்காலும் ஆற்றித் தேற்றுமே
காரிருள் பாவம் ஓட்டுமே
உம் தூய ஜோதி வீசுமே

Don`t copy text!