jeyarani

உம் அன்புக்கு இணையாகுமோ | Um Anbukku Inaiyagumo / Um Anbukku Inaiyaagumo

ஓராயிரம் அன்பைக்கண்டாலும்
உம் அன்புக்கு இணையாகுமோ
ஒரு கோடி சிநேகம் வந்தாலும்
உம் சிநேகத்துக்கு நிகராகுமோ

இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்
இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்

1
முதலும் முடிவும் ஆனவரே
முழுவதுமாய் என்னை அறிந்தவரே
இதுவரை நடத்தி வந்தவரே
இனியும் நடத்த வல்லவரே

முதலும் முடிவும் ஆனவரே
முழுவதுமாய் என்னை அறிந்தவரே
இதுவரை நடத்தி வந்தவரே
இனியும் நடத்த வல்லவரே

இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்
இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்

2
விழுகையில் தூக்கி எடுத்தவரே
அழுகையில் ஆறுதல் செய்பவரே
விழிகளில் நிறைந்து இருப்பவரே
வழிகளில் துணையாய் வருபவரே

விழுகையில் தூக்கி எடுத்தவரே
அழுகையில் ஆறுதல் செய்பவரே
விழிகளில் நிறைந்து இருப்பவரே
வழிகளில் துணையாய் வருபவரே

இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்
இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்

3
புதிய இதயம் கொடுத்தவரே
அதிக கிருபைகள் அளித்தவரே
அழகிய உமது அன்புக்காக
அனுதினம் வாழ்ந்திடச்செய்பவரே

புதிய இதயம் கொடுத்தவரே
அதிக கிருபைகள் அளித்தவரே
அழகிய உமது அன்புக்காக
அனுதினம் வாழ்ந்திடச்செய்பவரே

இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்
இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்

4
பாவியாக நான் இருந்தேன்
பாழ்நிலமாக வாழ்ந்து வந்தேன்
பாவியாக நான் இருந்தேன்
பாழ்நிலமாக வாழ்ந்து வந்தேன்

பாசமாய் பூமியில் அவதரித்தீர்
இயேசுவே எனக்காய் உயிர்கொடுத்தீர்
பாசமாய் பூமியில் அவதரித்தீர்
இயேசுவே எனக்காய் உயிர்கொடுத்தீர்

இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்
இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்

ஓராயிரம் அன்பைக்கண்டாலும்
உம் அன்புக்கு இணையாகுமோ
ஒரு கோடி சிநேகம் வந்தாலும்
உம் சிநேகத்துக்கு நிகராகுமோ

ஓராயிரம் அன்பைக்கண்டாலும்
உம் அன்புக்கு இணையாகுமோ
ஒரு கோடி சிநேகம் வந்தாலும்
உம் சிநேகத்துக்கு நிகராகுமோ

இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்
இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன்

Um Anbukku Inaiyagumo / Um Anbukku Inaiyaagumo | Jeyarani Andrew / Bible Calls, Mugappair East, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!