jeffery

கன்மலையே என் இயேசுவே | Kanmalaiyae En Yesuvae

கன்மலையே என் இயேசுவே
காப்பவரும் நீர் ஐயா
கன்மலையே என் இயேசுவே
காப்பவரும் நீர் ஐயா

வாதை சூழ்ந்த இப்பாழ் உலகில்
வல்ல கரம் என்னை சூழ்ந்திடுதே

கன்மலையே என் இயேசுவே
காப்பவரும் நீர் ஐயா

1
கொரோனா கொள்ளை நோய் அலைகளிலே
மனிதர்கள் சிக்குண்டு மரிக்கையிலே

சோர்ந்து போன எந்தன் மக்களையே
உயிர்பெறச் செய்யும் என் இயேசுவே
சோர்ந்து போன எந்தன் மக்களையே
உயிர்பெறச் செய்யும் என் இயேசுவே

கன்மலையே என் இயேசுவே
காப்பவரும் நீர் ஐயா

2
போக்கையும் வரத்தையும் காப்பவரே
கைவிடாமல் காத்து நடத்துமையா

கொள்ளை நோய் எங்களை நெருக்கிடினும்
கர்த்தர் நீர் இருப்பதால் பயமில்லையே
கொள்ளை நோய் எங்களை நெருக்கிடினும்
கர்த்தர் நீர் இருப்பதால் பயமில்லையே

கன்மலையே என் இயேசுவே
காப்பவரும் நீர் ஐயா

3
நீர் வரும் நாழிகை சமீபமே
என்பதை உணர்ந்து செயல்படவே
எங்களை தாழ்த்தி அர்ப்பணிக்க
இறைவா எங்களுக்கருள் தாருமே

கன்மலையே என் இயேசுவே
காப்பவரும் நீர் ஐயா
கன்மலையே என் இயேசுவே
காப்பவரும் நீர் ஐயா

வாதை சூழ்ந்த இப்பாழ் உலகில்
வல்ல கரம் என்னை சூழ்ந்திடுதே

கன்மலையே என் இயேசுவே
காப்பவரும் நீர் ஐயா

கன்மலையே என் இயேசுவே | Kanmalaiyae En Yesuvae | Jeffery Reny

Don`t copy text!