நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில் / Neer Jeeva Appam Panjaththil / Neer Jeeva Appam Panjathil
நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில் / Neer Jeeva Appam Panjaththil / Neer Jeeva Appam Panjathil
1
நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில்
உம்மால் என் பசி ஆறும்
நான் போம் வனாந்தரங்களில்
என் உள்ளம் உம்மை நாடும்
பிதாவின் ஈவாம் மன்னாவே
நீர் என்னை பாவ இச்சைக்கே
விலக்கிக் காத்துக் கொள்ளும்
2
நீர் ஜீவ ஊற்று உம்மாலே
என் ஆத்மத் தாகம் தீரும்
நீர் தரும் ஈவு நித்தமே
சுரக்கும் தண்ணீராகும்
நீரூற்றாய் என்னில் ஊறுமேன்
நிறைவாய் நித்தம் தாருமேன்
ஆரோக்கியமும் சீரும்
3
நீர் என்னை ஜோடிக்கும் உடை
நீர் என் அலங்கரிப்பு
நாம் உம்முடைய நீதியை
அணிவதென் விருப்பு
பூலோகத்தின் சிங்காரமாம்
விநோத சம்பிரமம் எல்லாம்
என் ஆவிக்கு வெறுப்பு
4
நீர் நான் சுகித்து தங்கிடும்
அரண்மனையும் வீடும்
புயல் அடித்தும் விருதா
பேய் வீணாய் என்னைச் சீறும்
நான் உம்மில் நிற்பேன் ஆகையால்
கெடேன் பொல்லார் எழும்பினால்
நீர் என் வழக்கைத் தீரும்
5
என் மேய்ப்பராய் இருக்கிறீர்
என் மேய்ச்சலும் நீர்தாமே
காணாமல் போன என்னை நீர்
அன்பாக மீட்போராமே
இவ்வேழை ஆட்டை என்றைக்கும்
நீர் விலக விடாதேயும்
நான் உம்முடையோனாமே
6
நீரே நான் என்றும் வாஞ்சிக்கும்
மா நேசமுள்ள நாதர்
நீரே என் ஆசாரியரும்
பலியுமான கர்த்தர்
நீர் என்னை ஆளும் ராஜாவும்
உம்மோடே எந்தப் போரிலும்
ஜெயிப்பேன் மா சமர்த்தர்
