jebha

வார்த்தையால் | Vaarthaiyaal / Vaarththaiyaal

வார்த்தையால் அனைத்தையும் உருவாக்கினீர்
கரத்தால் மனிதனை வனைந்துக்கொண்டீர்
வார்த்தையால் அனைத்தையும் உருவாக்கினீர்
கரத்தால் மனிதனை வனைந்துக்கொண்டீர்

மனுஷனில் மனுஷியை மெருகேற்றினீர்
குடும்பமாய் பலுகி பெருகசெய்தீர்
மனுஷனில் மனுஷியை மெருகேற்றினீர்
குடும்பமாய் பலுகி பெருகசெய்தீர்

சிருஷ்டித்த கர்த்தர் நீரே வார்த்தையானவரே
ஜலத்தின்மேல் அசைவாடும் தூய ஆவியே

ஜனக்கூட்டத்தில் கண்டீர் ஆபிராமை
ஆபிரகாம் என்று பெயர் சூட்டினீர்
ஜனக்கூட்டத்தில் கண்டீர் ஆபிராமை
ஆபிரகாம் என்று பெயர் சூட்டினீர்

ஈசாக்கு ஜெபத்தை ஏறெடுக்க
யாக்கோபை தெரிந்து நடத்தி வந்தீர்
ஈசாக்கு ஜெபத்தை ஏறெடுக்க
யாக்கோபை தெரிந்து நடத்தி வந்தீர்

திருத்துவ தேவன் நீரே முக்காலம் ஆள்பவரே
முற்பிதாக்களை நடத்திய தேவன் நீரே

2
இஸ்ரவேலர் மன்றாடி கதறுகையில் தம்
ஜனமென்று நிரூபித்து மீட்டுக் கொண்டீர்
இஸ்ரவேலர் மன்றாடி கதறுகையில் தம்
ஜனமென்று நிரூபித்து மீட்டுக் கொண்டீர்

வனாந்திர மார்க்கமாய் வழி நடத்தி
இன்பக்கானான் தேசத்தை பரிசளித்தீர்
மேகஸ்தம்பமே மேன்மையானவரே
யுத்தத்தில் வல்லவர் அனைத்தையும் ஆள்பவரே

3
மிகுந்த சந்தோஷத்தின் நற்செய்தியே
அன்பை அடிச்சுவடாய் பதித்தவரே
மிகுந்த சந்தோஷத்தின் நற்செய்தியே
அன்பை அடிச்சுவடாய் பதித்தவரே

பாவத்தை மன்னிக்க சாபமாய் மாறி
சிலுவையை ஏற்று மரித்தவரே
என்னை மீட்க மீண்டும் வருவீர் நீரே

மாம்சமாய் பிறந்தவரே மரணத்தை ஜெயித்தவரே
ராஜாதிராஜாவாய் மீண்டும் வருபவரே

வார்த்தையால் | Vaarthaiyaal / Vaarththaiyaal | L. Lobin Linesh, B. Aksha John | J.E. Jebha | Jeen Davis

Don`t copy text!