jebaththin

ஜெபத்தின் ஆவலை / Jebaththin Aavalai / Jebathin Aavalai

1
ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்
தெய்வாவீ லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்

2
பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்

3
எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்
நான் நிலை நிற்கும்படியாய்
கிருபை அளியும்

4
தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச் செய்திடும்

ஜெபத்தின் ஆவலை / Jebaththin Aavalai / Jebathin Aavalai

Don`t copy text!