jayaseelan

இல்லத்தின் தலைவராய் இயேசு / Illathin Thalaivaraai Yesu / Illathin Thalaivarai Yesu

இல்லத்தின் தலைவராய் இயேசு இருந்தால்
இல்லை என்பது இல்லையே

1
நிறைவான வாழ்வினைத் தருவார் தந்து
குறையாவும் போக்கியே விடுவார்
மறைவான விருந்தினராவார் – இன்ப
மறை ஞான விருந்தினைத் தருவார்

இல்லத்தின் தலைவராய் இயேசு இருந்தால்
இல்லை என்பது இல்லையே

2
வழியாக வருபவர் அவரே வழியில்
ஒளியாக திகழ்பவர் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே நம்மைத்
தழுவியே அணைப்பர் அவரே

இல்லத்தின் தலைவராய் இயேசு இருந்தால்
இல்லை என்பது இல்லையே

3
அவர் பாதம் தொடர்ந்திட வேண்டும் நித்தம்
அவர் பாதை நடந்திட வேண்டும்
அவர்போல் வாழ்ந்திட வேண்டும் என்றும்
பிறர்க்காக உழைத்திட வேண்டும்

இல்லத்தின் தலைவராய் இயேசு இருந்தால்
இல்லை என்பது இல்லையே

இல்லத்தின் தலைவராய் இயேசு / Illathin Thalaivaraai Yesu / Illathin Thalaivarai Yesu | Jacintha Jayaseelan, Jenifa Joy, Kirubavathi Daniel | Kirubavathi Daniel | M. Thomas Thangaraj

Don`t copy text!