jasmine

இம்மானுவேல் இம்மானுவேல் / Immanuvel Immanuvel

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு என்றும் இருப்பவர் நீர்
இம்மானுவேல் இம்மானுவேல்
எனக்காக சிலுவையில் மரித்தவர் நீர்

நேற்றும் இன்றும் மாறாதவர்
தம் வார்த்தையால் உலகத்தை சிருஷ்டித்தவர்
எந்தன் அபிஷேகமே
எந்தன் அபிஷேகமே

1
மேசியாவே மேசியாவே
என்மேல் உருக்கம் உள்ளவரே
ஆட்டுக்குட்டி நீர் ஆட்டுக்குட்டி
எந்தன் பாவத்திற்காய் நீர் பலியானீரே

நீரே வழியும் சத்யம் ஜீவன்
கிருபையாய் எனக்காக இறங்கினீரே

எந்தன் இரட்சகரே
எந்தன் இரட்சகரே

2
பரிசுத்தரே பரிசுத்தரே
இந்த பாவியை நேசிக்க பிறந்தவரே
மேய்ப்பரே நல் மேய்ப்பரே
நீர் என்னையும் மந்தையில் சேர்ப்பவரே

மீண்டும் உயிரோடு எழுந்தவரே
நீரே எனக்காய் மீண்டும் வருபவரே

எந்தன் அடைக்கலமே
எந்தன் அடைக்கலமே

3
வார்த்தையே வார்த்தையே
வார்த்தையால் என்னை போஷிப்பவரே
கர்த்தரே கர்த்தரே
கருத்தாய் எனக்காய் ஜெபிப்பவரே

எனக்காய் உயிரை தந்தவர் நீர்
உம்மை நான் என்றும் நேசிக்கிறேன்
எந்தன் ஜீவன் நீரே
எந்தன் ஜீவன் நீரே

இம்மானுவேல் இம்மானுவேல் / Immanuvel Immanuvel | Joanna Agnes | Ambika Jasmine | Joe Smith

Don`t copy text!