isravele

இஸ்ரவேலே என் சொந்த ஜனமே / Isravele En Sondha Janame / Isravele En Sontha Janame / Isravele Yen Sondha Janame / Isravele Yen Sontha Janame

இஸ்ரவேலே என் சொந்த ஜனமே
நான் உன்னை மறக்கவில்லை
இஸ்ரவேலே என் சொந்த ஜனமே
நான் உன்னை மறக்கவில்லை

இரட்சகரான சிருஷ்டிகர் என்னை
நீ ஏன் மறந்துவிட்டாய்
இரட்சகரான சிருஷ்டிகர் என்னை
நீ ஏன் மறந்துவிட்டாய்

என்னை நீ மறந்திட காரணம் என்ன
என்னிடம் நீ கண்ட அநியாயம் என்ன
என்னை நீ மறந்திட காரணம் என்ன
என்னிடம் நீ கண்ட அநியாயம் என்ன

இஸ்ரவேலே என் சொந்த ஜனமே
நான் உன்னை மறக்கவில்லை

1
கடக்கக்கூடாத நித்திய பிரமாணம்
கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன்
கடக்கக்கூடாத நித்திய பிரமாணம்
கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன்

அலைகள் மணல் மீது மோதி அடித்தாலும்
மணலை மேற்கொள்ள அலைகளால் முடியாதே
அலைகள் மணல் மீது மோதி அடித்தாலும்
மணலை மேற்கொள்ள அலைகளால் முடியாதே

கடல் போல் இருக்கிற என் சொந்த ஜனமே
உனக்கு எல்லையாக நான் இருந்தேன்
கடல் போல் இருக்கிற என் சொந்த ஜனமே
உனக்கு எல்லையாக நான் இருந்தேன்

அலைப்போல் எழும்பும் உன் செயலோ
என்னையும் ஏன் தான் மீறியதோ
அலைப்போல் எழும்பும் உன் செயலோ
என்னையும் ஏன் தான் மீறியதோ

ஆனாலும் உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனாலும் உன்னை நான் நேசிக்கிறேன்

இஸ்ரவேலே என் சொந்த ஜனமே
நான் உன்னை மறக்கவில்லை
இஸ்ரவேலே என் சொந்த ஜனமே
நான் உன்னை மறக்கவில்லை

2
இரண்டு தீமைகளை செய்ததும் நீதானே
ஜீவதண்ணீர் ஊற்று என்னை புறக்கணித்தாய்
இரண்டு தீமைகளை செய்ததும் நீதானே
ஜீவதண்ணீர் ஊற்று என்னை புறக்கணித்தாய்

தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை
நீயாய் உனக்கு தேடிக்கொண்டாய்
தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை
நீயாய் உனக்கு தேடிக்கொண்டாய்

முற்றிலும் நற்கனி தருகிற உயர்குல
திராட்சை செடியாக நாட்டினேன்
முற்றிலும் நற்கனி தருகிற உயர்குல
திராட்சை செடியாக நாட்டினேன்

காட்டில் இருக்கிற திராட்சை செடியின்
ஆகாத கொடியாய் மாறினதென்ன
காட்டில் இருக்கிற திராட்சை செடியின்
ஆகாத கொடியாய் மாறினதென்ன

இப்போதும் உன்னை நான் நேசிக்கிறேன்
இப்போதும் உன்னை நான் நேசிக்கிறேன்

இஸ்ரவேலே என் சொந்த ஜனமே
நான் உன்னை மறக்கவில்லை
இஸ்ரவேலே என் சொந்த ஜனமே
நான் உன்னை மறக்கவில்லை

Don`t copy text!