irangum

இறங்கும் தெய்வ ஆவியே / Irangum Deiva Aaviye

1   
இறங்கும் தெய்வ ஆவியே
அடியார் ஆத்துமத்திலே
பரத்தின் வரம் ஈந்திடும்
மிகுந்த அன்பை ஊற்றிடும்

2   
உம்மாலே தோன்றும் ஜோதியால்
எத்தேசத்தாரையும் அன்பால்
சம்பந்தமாக்கி யாவர்க்கும்
மெய் நம்பிக்கையை ஈந்திடும்

3   
பரத்தின் தூய தீபமே
பரத்துக்கேறிப் போகவே
வானாட்டு வழி காண்பியும்
விழாதவாறு தாங்கிடும்

4   
களிப்பிலும் தவிப்பிலும்
பிழைப்பிலும் இறப்பிலும்
எப்போதும் ஊக்கமாகவே
இருக்கும்படி செய்யுமே

Don`t copy text!