inba

இன்ப இயேசுவின் இணையில்லா நாமத்தை புகழ்ந்து / Inba Yesuvin Innaiyillaa Naamathai Pugalndhu / Inba Yesuvin Innaiyillaa Naamathai Pugalnthu

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

1
நித்தியமான பர்வதமே
உந்தனில் நிலைத்திருப்பேன்
நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
நித்தம் நடத்திகிறீர் என்னையும்
உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

2
பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
ஆழ்ந்து நான் மாள்கையிலே
பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
பாரில் பரிசுத்தராகுதற்காய் மிக
பரலோக நன்மைகளால் நிறைந்தீர்

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

3
மானானது நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போல் என்
ஆத்துமா உம்பொன் முகம் காணவே
வாஞ்சித்து கதறிடுதே
வானிலும் இந்தப் பூமிலும் நீர் என்
வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

4
சீயோனிலே நீர் சிந்தை
வைத்தீர் சேர்ந்தொன்றாய் கட்டுதட்காய்
திவ்விய அபிஷேகம் தந்தெம்மை நிறுத்தி
சேர்த்தீரே சுத்தருடன்
சேதம் வராமல் காத்ததினால்
சேவிப்பேன் நித்திய நித்தியமாய்

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

5
ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
அன்பரை உளம் கனிந்தே
அற்புத ஜெயம் ஈந்தீரே
அளவில்லாத ஜீவனை அளித்தே
அல்லேலூயா துதி கன மகிமை உம்
நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

இன்ப இயேசுவின் இணையில்லா நாமத்தை புகழ்ந்து / Inba Yesuvin Innaiyillaa Naamathai Pugalndhu / Inba Yesuvin Innaiyillaa Naamathai Pugalnthu | V. Nataraja Mudaliar

இன்ப இயேசுவின் இணையில்லா நாமத்தை புகழ்ந்து / Inba Yesuvin Innaiyillaa Naamathai Pugalndhu / Inba Yesuvin Innaiyillaa Naamathai Pugalnthu

இன்ப இயேசுவின் இணையில்லா நாமத்தை புகழ்ந்து / Inba Yesuvin Innaiyillaa Naamathai Pugalndhu / Inba Yesuvin Innaiyillaa Naamathai Pugalnthu | Great Assembly of Holy Mountain, Vepery, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!