இம்மட்டும் என்னை | Immattum Ennai
இம்மட்டும் என்னை | Immattum Ennai
1
இம்மட்டும் என்னை நடத்தின என் இயேசு ரொம்ப நல்லவரே
என்னை மன்னித்து மறுவாழ்வு தந்து மகனாய் மாற்றினீரே
என் அழைப்பின் காரணரே பாடிக் கொண்டாடுவேன்
துதித்து உயர்திடுவேன்
துயரே துணையாளரே
உம்மையன்றி வேறே துணை எனக்கில்லையே
என்னை அழைத்தவரே
என்னை நடத்தி செல்லுவீர்
என்னை உயர்த்தினீரே
உமக்காய் தொடர்ந்து ஒடிவேன்
2
தொடர்ந்து போகதான் முடியுமோ என்று கலங்கின நேரங்களில்
திக்கற்று கைவிடப்பட்டு அழுத நேரத்திலும்
நான் உண்டு என்று என்னை தாங்கி நடத்தினீர்
இம்மட்டும் நடத்தினீர் நிச்சயம் நம்பிக்கை உண்டு
நீரே என் துணையாளரே
இனிமேலும் நடத்துவீர் தாங்கி சுமந்திடுவீர்
உம்மை மட்டும் பற்றிக் கொள்ளுவேன்
என்னை அழைத்தவரே
என்னை நடத்தி செல்லுவீர்
என்னை உயர்த்தினீரே
உமக்காய் தொடர்ந்து ஒடிவேன்
3
மீற முடியாத பயமும் மிரட்டும் எதிர்ப்புகளும் என் வாழ்வை தடுக்கும்போது
கரம்பிடித்து என்னை கண்மணி போல காத்து
பயப்படாதே நான் உண்டு என்று சொன்னவரே
இம்மட்டும் நடத்தினீர் நிச்சயம் நம்பிக்கை உண்டு
நீரே என் துணையாளரே
இனிமேலும் நடத்துவீர் தாங்கி சுமந்திடுவீர்
உம்மை மட்டும் பற்றிக் கொள்ளுவேன்
என்னை அழைத்தவரே
என்னை நடத்தி செல்லுவீர்
என்னை உயர்த்தினீரே
உமக்காய் தொடர்ந்து ஒடிவேன்
என்னை அழைத்தவரே
என்னை நடத்தி செல்லுவீர்
என்னை உயர்த்தினீரே
உமக்காய் தொடர்ந்து ஒடிவேன்
இம்மட்டும் என்னை | Immattum Ennai | Daniel Livingston, Rohith Fernandes, Evangeline Shiny Rex | Johnpaul Reuben | Daniel Livingston