பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும் / Paalar Gnayiridhu Paasamaai Vaarum / Palar Gnayiridhu Pasamai Varum / Paalar Gnayirithu Paasamaai Vaarum / Palar Gnayirithu Pasamai Varum
பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும் / Paalar Gnayiridhu Paasamaai Vaarum / Palar Gnayiridhu Pasamai Varum / Paalar Gnayirithu Paasamaai Vaarum / Palar Gnayirithu Pasamai Varum
பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
பாடி யேசு நாமம் பணிந்து போற்றும்
தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி யேசு அன்பை எண்ணிப்
பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
பாடி யேசு நாமம் பணிந்து போற்றும்
1
பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்
பாலர் நேசர் பதம் பணியக்கற்றோம்
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்
ஊரில் எங்கும் கார்ட் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம்
பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
பாடி யேசு நாமம் பணிந்து போற்றும்
2
தேடி வந்தலையும் தேசிகருண்டு
பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு
பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
பாடி யேசு நாமம் பணிந்து போற்றும்
3
இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே
இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே
அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்மநேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக் கொண்டு
பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
பாடி யேசு நாமம் பணிந்து போற்றும்