fernandez

நானல்ல | Naanalla

நானல்ல நீரே என்னை தேடி வந்த தெய்வம்
நான் அழைத்திடும் முதல் நாமம்
இயேசு எந்தன் தெய்வம்

இருந்த வண்ணம் உம்மிடம் வந்தேன்
என்னை ஏற்றுக் கொண்டீரே
எந்தன் வாழ்வை மாற்றி என்னை
புது சிருஷ்டியாக்கினீரே

உம்மை உயர்த்துவேன்
உம்மை போற்றிடுவேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

உம்மை உயர்த்துவேன்
உம்மை போற்றிடுவேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

1
வியாதியின் பாதையில் பெலவீன வேளையில்
உந்தன் கரம் என்னை எழுப்பினதே
சோர்ந்திட்ட வேளையில் சத்துவம் தந்து என்னை
உம் வார்த்தையால் தேற்றினீரே

நல்லவரே வல்லவரே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
நல்லவரே வல்லவரே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

2
காலகாலமாய் என்னையும் சுமந்தீரே
தாயைப்போல என்னை தேற்றினீரே
உயர்விலும் தாழ்விலும் என் கரத்தைப் பிடித்து
உண்மையுள்ளவராய் வாழ்கிறீரே

பெரியவரே துணையாளரே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
பெரியவரே துணையாளரே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

நானல்ல நீரே என்னை தேடி வந்த தெய்வம்
நான் அழைத்திடும் முதல் நாமம்
இயேசு எந்தன் தெய்வம்

இருந்த வண்ணம் உம்மிடம் வந்தேன்
என்னை ஏற்றுக் கொண்டீரே
எந்தன் வாழ்வை மாற்றி என்னை
புது சிருஷ்டியாக்கினீரே

உம்மை உயர்த்துவேன்
உம்மை போற்றிடுவேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

உம்மை உயர்த்துவேன்
உம்மை போற்றிடுவேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

உம்மை உயர்த்துவேன்
உம்மை போற்றிடுவேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

நானல்ல | Naanalla | Anne Kiruba, Rohith Fernandez | John Rohith | Anne Kiruba

Don`t copy text!