eththanaiyo

எத்தனையோ எத்தனையோ நன்மைகள் | Ethanaiyo Ethanaiyo Nanmaigal / Eththanaiyo Eththanaiyo Nanmaigal

எத்தனையோ எத்தனையோ நன்மைகள் செய்தார் இயேசு
இயேசு இயேசு இயேசு
நான் நன்றாய் வாழ்ந்திட தன்னையே தந்தார் இயேசு
இயேசு இயேசு இயேசு

அவர் கிருபை மாறாதது
அவர் அன்பு குறையாதது
அவர் கிருபை மாறாதது
அவர் அன்பு குறையாதது

1
தாயின் கருவிலே உருவாகும் முன்னாலே
பெயர் சொல்லி அழைத்தீர் உன்னதரே
உலகத்தை படைக்கும் எண்ணத்தின் முன்னாலே
என்னை நினைவாய் கொண்ட தெய்வமே

உமக்கு நிகரான தெய்வம் இல்லை இல்லை
உம்மை போல் யாரையும் கண்டதில்லை
உமக்கு நிகரான தேவன் இல்லை இல்லை
உம்மை போல் யாரையும் கண்டதில்லை

உம்மை ஆராதித்து உம்மை பாடி துதித்து
கொண்டாட என்னையும் தெரிந்து கொண்டீர்
உம்மை ஆராதித்து உம்மை பாடி துதித்து
கொண்டாட என்னையும் தெரிந்து கொண்டீர்

2
நடைகள் எல்லாமே சீர்படுத்தி வைத்தீர்
புல்லின் மேய்ச்சலில் நடத்தி வந்தீர்
மரண இருளின் பள்ளத்தாக்கின் போதும்
உமது கோலும் தடியும் தேற்றும்

உம் நாமத்தை எனக்கும் தரித்ததினால்
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்திடுவீர்
உம் நாமத்தை எனக்கும் தரித்ததினால்
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்திடுவீர்

எங்கள் நிறைவெல்லாம் இயேசு தானே
வாழ்க்கையில் குறைவே இல்லை இல்லை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மையையும் கிருபையும் தொடர்ந்திடுமே

எத்தனையோ எத்தனையோ நன்மைகள் செய்தார் இயேசு
இயேசு இயேசு இயேசு
நான் நன்றாய் வாழ்ந்திட தன்னையே தந்தார் இயேசு
இயேசு இயேசு இயேசு

அவர் கிருபை மாறாதது
அவர் அன்பு குறையாதது
அவர் கிருபை மாறாதது
அவர் அன்பு குறையாதது

அவர் அன்பு குறையாதது

எத்தனையோ எத்தனையோ நன்மைகள் | Ethanaiyo Ethanaiyo Nanmaigal / Eththanaiyo Eththanaiyo Nanmaigal | Blessed Prince P, John | Vijay Aaron Elangovan | Blessed Prince P

Don`t copy text!