ennudan

இன்றே நீ என்னுடன் / Inrae Nee Ennudan

இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில்
என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள்
இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில்
என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள்

1
கர்த்தா உம் ராஜ்யத்தில் சேரும்போதென்னையும்
கர்த்தா உம் ராஜ்யத்தில் சேரும்போதென்னையும்

கருத்தில்வை எனக்கெஞ்சும் கள்ளன் பெற்றாற் போல்

இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில்
என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள்

2
கொல்லும் உம் பகைவர்க்குக் கூறும் மன்னிப்பை
கொல்லும் உம் பகைவர்க்குக் கூறும் மன்னிப்பை

கூர்ந்து கள்ளன் கேட்டுக் குணப்படுந்தன்மையாய்

இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில்
என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள்

3
குருசில் உன் ரூபத்தைக் கொலைஞன் அகம்பித்து
குருசில் உன் ரூபத்தைக் கொலைஞன் அகம்பித்து

உருகியே அவனெஞ்சம் உனைப்பற்றச் செய்தாயே

இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில்
என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள்
இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில்
என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள்

Don`t copy text!