ennil

என்னில் என்ன கண்டீர் / Ennil Enna Kandeer

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ்வேழைக்கு தகுதி இல்லையே

என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என் இயேசுவே

1
உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்

உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என் இயேசுவே

3
பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் எங்கும் இல்லையே

பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் எங்கும் இல்லையே

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ்வேழைக்கு தகுதி இல்லையே

என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என் இயேசுவே

Don`t copy text!