ennalume

எந்நாளுமே துதிப்பேன் | Ennalume Thuthippen / Ennaalume Thuthippen

எந்நாளுமே துதிப்பேன் என் நேச ரேசுவை
எந்நாளுமே துதிப்பேன்

காலையும் மாலையும் மற்றெல்லா வேளையும்
காலையும் மாலையும் மற்றெல்லா வேளையும்
கையையும் நெஞ்சையும் மேலே உயர்த்தி நான்
கையையும் நெஞ்சையும் மேலே உயர்த்தி நான்

எந்நாளுமே துதிப்பேன் என் நேச ரேசுவை
எந்நாளுமே துதிப்பேன்

1
பாவங்கள் நீக்கி விட்டார் தம் இரத்தத்தைச் சிந்தி
பாவங்கள் நீக்கி விட்டார்

காணாமற் போயினேன் கண்டு பிடித்தனர்
காணாமற் போயினேன் கண்டு பிடித்தனர்
தூக்கிச் சுமந்து தம் மந்தையிற் சேர்த்தனர்
தூக்கிச் சுமந்து தம் மந்தையிற் சேர்த்தனர்

எந்நாளுமே துதிப்பேன் என் நேச ரேசுவை
எந்நாளுமே துதிப்பேன்

2
அன்பின் சொரூபி அவர் அவ்வன்பைக் காட்டினார்
அன்பின் சொரூபி அவர்

மாட்டுத் தொழு முதல் தூக்கு மரம் வரை
மாட்டுத் தொழு முதல் தூக்கு மரம் வரை
ஈனக் கோலம் பூண்டு நிந்தையும் சகித்தார்
ஈனக் கோலம் பூண்டு நிந்தையும் சகித்தார்

எந்நாளுமே துதிப்பேன் என் நேச ரேசுவை
எந்நாளுமே துதிப்பேன்

3
சாவின் நிழலதிலும் பிசாசினால் வரும்
சாவின் நிழலதிலும்

நானே உன் பரிகாரி விலக்குவேன் வியாதியை
நானே உன் பரிகாரி விலக்குவேன் வியாதியை
நோக்கிப் பார் என்னை இரட்சிப்பேன் என்பதால்
நோக்கிப் பார் என்னை இரட்சிப்பேன் என்பதால்

எந்நாளுமே துதிப்பேன் என் நேச ரேசுவை
எந்நாளுமே துதிப்பேன்

4
அளிக்கிறார் நன்மையெல்லாம் ஒவ்வொரு நாளிலும்
அளிக்கிறார் நன்மையெல்லாம்

ஊணும் உடையையும் வேண்டும் பொருளெல்லாம்
ஊணும் உடையையும் வேண்டும் பொருளெல்லாம்
குறைவின்றி நிறைவாகத் தந்திடுவதால் நான்
குறைவின்றி நிறைவாகத் தந்திடுவதால் நான்

எந்நாளுமே துதிப்பேன் என் நேச ரேசுவை
எந்நாளுமே துதிப்பேன்

5
பரிசுத்த ஜீவியத்தை இப்பார்தலத்திலே
பரிசுத்த ஜீவியத்தை

தேவ பயத்தோடு ஊக்கமாய்ச் செய்யவே
தேவ பயத்தோடு ஊக்கமாய்ச் செய்யவே
ஆவியின் ஈவையும் எனக்களித்ததால்
ஆவியின் ஈவையும் எனக்களித்ததால்

எந்நாளுமே துதிப்பேன் என் நேச ரேசுவை
எந்நாளுமே துதிப்பேன்

6
வந்திடுவாரே அவர் வெகுசீக்கிரமாக
வந்திடுவாரே அவர்

காண்பேன் அவரை நான் சேர்வேன் அவரிடம்
காண்பேன் அவரை நான் சேர்வேன் அவரிடம்
அல்லேலூயா பாடிப் பாடிப் போற்றியே
அல்லேலூயா பாடிப் பாடிப் போற்றியே

எந்நாளுமே துதிப்பேன் என் நேச ரேசுவை
எந்நாளுமே துதிப்பேன்

7
வாழுவேன் என்றைக்குமே என் நேசர் பக்கத்தில்
வாழுவேன் என்றைக்குமே

புதிய எருசலேம் என் சுய தேசமாம்
புதிய எருசலேம் என் சுய தேசமாம்
வானவருடன் நான் ஆனந்தங்கொள்ளுவேன்
வானவருடன் நான் ஆனந்தங்கொள்ளுவேன்

எந்நாளுமே துதிப்பேன் என் நேச ரேசுவை
எந்நாளுமே துதிப்பேன்

எந்நாளுமே துதிப்பேன் | Ennalume Thuthippen / Ennaalume Thuthippen

Don`t copy text!