ennalumae

எந்நாளுமே துதிப்பாய் / Ennalumae Thuthippaai / Ennalume Thuthipai

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

1
பாவங்கள் எத்தனையோ நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ

பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தயவை எண்ணி

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

2
எத்தனையோ கிருபை உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை

நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி
நேயமதாக ஜீவனை மீட்டதால்

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

3
நன்மையாலுன் வாயை நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை

உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
ஓங்கு இளமைபோலாகவே செய்ததால்

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

4
பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்திய மேயிது எந்நாளுமே

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

5
மன்னிப்பு மாட்சிமையாம் மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

6
தந்தைதன் பிள்ளைகட்கு தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் / Ennalumae Thuthippaai / Ennalume Thuthipai | Grace Joshua / Grace TV, Madurai, Tamil Nadu, India

எந்நாளுமே துதிப்பாய் / Ennalumae Thuthippaai / Ennalume Thuthipai | Pauline Matthew / New Life Church Dublin, Dublin, Ireland

Don`t copy text!