அழைத்தீரே எனதேசுவே | Azhaitheere Enathesuve / Azhaitheere Enadhesuve / Alaitheere Enathesuve / Alaitheere Enadhesuve
அழைத்தீரே எனதேசுவே | Azhaitheere Enathesuve / Azhaitheere Enadhesuve / Alaitheere Enathesuve / Alaitheere Enadhesuve
அழைத்தீரே எனதேசுவே உம்மை
எந்நாளும் பின் செல்லவே
அழைத்தீரே எனதேசுவே உம்மை
எந்நாளும் பின் செல்லவே
வினை போக்கினீர் எனை தூக்கினீர்
துணையானதால் உம் பின் செல்லுவேன்
வினை போக்கினீர் எனை தூக்கினீர்
துணையானதால் உம் பின் செல்லுவேன்
1
தூயாவி வல்லமையால் பூவில் தோன்றின என் இயேசுவே
தூயாவி வல்லமையால் பூவில் தோன்றின என் இயேசுவே
உம் போல நானும் தேவாவியாலே நிறைந்துமே மகிழ்ந்திடுவேன்
உம்மை எந்நாளும் பின் செல்லுவேன்
உம் போல நானும் தேவாவியாலே நிறைந்துமே மகிழ்ந்திடுவேன்
உம்மை எந்நாளும் பின் செல்லுவேன்
அழைத்தீரே எனதேசுவே உம்மை
எந்நாளும் பின் செல்லவே
2
பவமாந்தர் குரல் கேட்குதே என்றும் செயல்மாறி அலைமோதுதே
பவமாந்தர் குரல் கேட்குதே என்றும் செயல்மாறி அலைமோதுதே
தரிசனம் கண்டு திறப்பினில் நிற்க அடியேனை அழைத்தீர் ஐயா
உம்மை எந்நாளும் பின் செல்லுவேன்
தரிசனம் கண்டு திறப்பினில் நிற்க அடியேனை அழைத்தீர் ஐயா
உம்மை எந்நாளும் பின் செல்லுவேன்
அழைத்தீரே எனதேசுவே உம்மை
எந்நாளும் பின் செல்லவே
3
உம் வாழ்வில் எந்நாளுமே தேவா சித்தமே செய்தீர் ஐயா
உம் வாழ்வில் எந்நாளுமே தேவா சித்தமே செய்தீர் ஐயா
அதுபோல நானும் உம் சித்தம் செய்ய முற்றுமாய் அற்பணித்தேன்
பூவில் எந்நாளும் பின் செல்லுவேன்
அதுபோல நானும் உம் சித்தம் செய்ய முற்றுமாய் அற்பணித்தேன்
பூவில் எந்நாளும் பின் செல்லுவேன்
அழைத்தீரே எனதேசுவே உம்மை
எந்நாளும் பின் செல்லவே
வினை போக்கினீர் எனை தூக்கினீர்
துணையானதால் உம் பின் செல்லுவேன்
அழைத்தீரே எனதேசுவே உம்மை
எந்நாளும் பின் செல்லவே
அழைத்தீரே எனதேசுவே | Azhaitheere Enathesuve / Azhaitheere Enadhesuve / Alaitheere Enathesuve / Alaitheere Enadhesuve | Jollee Abraham | Vincent Samuel